ADDED : நவ 21, 2024 04:42 AM
மதுரை: தேசிய தடகள போட்டியில் பங்கேற்க உள்ள மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சூர்யாவுக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாதம் ரூ.6 ஆயிரத்திற்கான ஊக்கத் தொகையை மாவட்ட தடகள சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார்.
ஒடிசா புவனேஸ்வரில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள தேசிய தடகள போட்டிக்கு தமிழக அளவில் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஓராண்டுக்கு மாதந்தோறும் ரூ. 6ஆயிரம் வழங்க மாநில செயலாளர் லதா பரிந்துரைத்தார். இதில் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியை சேர்ந்த சூர்யாவும் ஒருவர். இவர் 110 மீட்டர் தடடைதாண்டும் ஓட்டத்திற்காக தேர்வானார். இவருக்கு ரூ.6ஆயிரம் ஊக்கத்தொகையை மதுரையில் நடந்த விழாவில் மாவட்ட சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார்.
இத்தொகையுடன் மாவட்ட சங்கம் சார்பில் கூடுதலாக ரூ.4ஆயிரம் வழங்கப்பட்டது.