ADDED : ஜன 14, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம்; செல்லம்பட்டி ஒன்றியம் நாட்டாபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பில் ரூ.1.10 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள், ரூ.90 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் சின்னச்சாமி தலைமை வகித்தார். ஆசிரியர் பசும்பொன் இளங்கோ வரவேற்றார். வங்கி சி.எஸ்.ஆர்., நிதியிலிருந்து வழங்கப்பட்ட உபகரணங்களை மதுரை மண்டல மேலாளர் ஜெயானந்த் ஜூலியஸ், உசிலம்பட்டி கிளை மேலாளர் விஜய், உதவி மேலாளர் ஆனந்த் வழங்கினர்.
ஆசிரியர்கள் பூங்கொடி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வேல்முருகன், பாண்டி, கிராம மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக பாரம்பரிய முறைப்படி பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பொங்கல் விழா கொண்டாடினர்.