ADDED : ஆக 20, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் நகர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. நகர் செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
மணிமாறன் பேசுகையில், ''நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில் திருமங்கலம் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கொண்டு வந்துள்ளோம். ரோடுகள் புதுப்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயார் செய்வதற்காக அறிவுசார் மையம் எனப்படும் நுாலகம் மாவட்டத்திலேயே முதல்முறையாக திருமங்கலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
நகராட்சி தலைவர் ரம்யா, மாவட்ட துணைச் செயலாளர் லதா, பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.