/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பதிவு அலுவலகத்தில் 'சர்வர்' பழுதால் பொதுமக்கள் அவதி
/
பதிவு அலுவலகத்தில் 'சர்வர்' பழுதால் பொதுமக்கள் அவதி
பதிவு அலுவலகத்தில் 'சர்வர்' பழுதால் பொதுமக்கள் அவதி
பதிவு அலுவலகத்தில் 'சர்வர்' பழுதால் பொதுமக்கள் அவதி
ADDED : அக் 09, 2025 04:33 AM
பேரையூர், : கடந்த ஒரு வாரமாக பத்திரப்பதிவு சர்வர் பழுதால் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வரு கின்றனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திருமணம் பதிவு, புதிய கட்டடம் கட்ட, சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற, கிரையம், தான செட்டில்மென்ட், குத்தகை பத்திரம் உட்பட அனைத்தையும் பதிவு செய்ய மக்கள் வருவர்.
இதற்காக பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவர். இதன் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. பின்னர் அதனை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி பதிவு செய்வர்.
கடந்த ஒரு வாரமாக சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வர வேண்டிய வருமானத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை காத்திருந்தவர்கள், சர்வர் பழுது சரியாகாததால் ஏமாற்றத்துடன் வீடுதிரும்பு கின்றனர்.
இதனால் பொதுமக்கள் திரும்பத் திரும்ப அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது. சர்வர் பழுதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.