நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி, : டி.கல்லுப்பட்டி ஒன்றியம் காரைக்கேணியில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் ரூ.12.39 லட்சத்தில் அமைத்துள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்ந்து வரும் செடிகளின் ரகங்கள், அவற்றின் விற்பனை குறித்து கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
எல்.கொட்டாணிபட்டியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், பொது நுாலக கட்டடம், சமத்துவ இடுகாடு, சுற்றுச்சுவர், அணுகு சாலை, விளையாட்டு உபகரண தொகுப்பு வழங்கப்பட்டதை பார்வையிட்டார். டி.கல்லுப்பட்டி ஊரக வளர்ச்சி நிறுவன அலுவலக வளாகத்தில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைத்த பேவர் பிளாக் சாலையை ஆய்வு செய்தார்.