தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுண்துளை இதய அறுவை சிகிச்சை

 நுண்துளை இதய அறுவை சிகிச்சை

 நுண்துளை இதய அறுவை சிகிச்சை


ADDED : செப் 29, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ தய அறுவை சிகிச்சையில் ஒரு புதிய அணுகுமுறை தான் நுண்துளை இதய அறுவை சிகிச்சை முறை.

இதய அறுவை சிகிச்சை என்றாலே அச்சம் ஏற்படுவது இயல்பு. நவீன மருத்துவத்தின் முன்னேற்றத்தால், நுண்துளை இதய அறுவை சிகிச்சை எனப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் (மைக்ஸ்) அறுவை சிகிச்சை, அந்த அச்சத்தை நம்பிக்கையாக மாற்றியுள்ளது.

பாரம்பரிய திறந்த இதய அறுவை சிகிச்சையைப் போல பெரிய கீறல் செய்வதற்குப் பதிலாக, மார்பில் சிறிய கீறல்கள் மூலம் சிறப்பு கருவிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட இதய வால்வு நோய்கள், சில கரோனரி தமனி நோய்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிற இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

இந்த நுண்துளை அறுவை சிகிச்சையால் நோயாளியின் வலி குறைகிறது. சிறிய தழும்புகளே காணப்படும். குறைந்தபட்ச திசு பாதிப்பு என்பதால் நோயாளி விரைவான குணமடைதல் சாத்தியமாகிறது. மேலும் பல 'மைக்ஸ்' அறுவை சிகிச்சை முறைகளில் மார்பெலும்பை (ஸ்டெர்னம்) வெட்ட வேண்டிய அவசியம் இல்லாததால் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பமுடிகிறது.

எப்போது 'மைக்ஸ்' தேவை இதய வால்வு நோய்கள், குறிப்பிட்ட கரோனரி தமனி நோய்கள், சில பிறவி இதயக் குறைபாடுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட இதயத் தாள கோளாறுகளுக்கான சிகிச்சையில் 'மைக்ஸ்' பயன்படுத்தலாம். இதய நோய்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு அளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கக்கூடும். எனினும் ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தே எந்த சிகிச்சை முறை தேவைப்படும் என்பதை டாக்டரே தீர்மானிப்பார்.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மார்பு வலி, மூச்சுதிணறல், இதயத்துடிப்பு அதிகரித்தல் அல்லது சீரற்ற துடிப்பு, எளிதில் சோர்வடைதல், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றைப் புறக்கணிக்காமல் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

சில இதய நோய்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் இதய செயலிழப்பு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படும்.

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பம், அனுபவமிக்க இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் நோயாளிகளுக்கு மேம்பட்ட இதய சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஆரோக்கியமான இதயத்திற்கு நவீன சிகிச்சையின் மென்மையான அணுகுமுறை தான் மைக்ஸ்' சிகிச்சை. உங்கள் இதயத்திற்கான சரியான சிகிச்சை அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

- டாக்டர் மேன் பிரெட் பெர்னாண்டோ, இதய அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us