நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை செல்வராஜ், நிதி நிறுவனம் நடத்த உரிமம் பெற 2015ல் மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார்.
வருவாய் உதவியாளர் கண்ணகி உரிமம் தர லஞ்சம் கேட்டார். செல்வராஜ் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். கண்ணகி 2015 மார்ச் 26ல் ரூ.4000 லஞ்சம் வாங்கியபோது போலீசாரிடம் பிடிபட்டார். லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கண்ணகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8000 அபராதம் விதித்து நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.