ADDED : பிப் 08, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை முத்தையா செட்டியார் படித்துறையை சேர்ந்தவர் மதியழகன்42. திண்டுக்கல்- பழநி ரோடு பேகம்பூரில் 2017 ல் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார். 21 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

