ADDED : செப் 24, 2024 05:02 AM
மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்ஸவம் துவங்க உள்ளது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு அக். 3 முதல் 15 வரை பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
அக். 3ல் அங்குரார்பணத்துடன் தொடங்கி, அக். 4ல் காலை 9:05 மணிக்கு மேல் 9:45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் அக். 13 வரை காலை, மாலை வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு நடைபெறும். பூஜைகள், ஆராதனைகள் செய்து கோஷ்டி முடிந்து மீண்டும் ஆஸ்தானம் திரும்பும்.
முக்கிய நிகழ்வான தெப்ப உற்ஸவம் அக். 14ல் காலை 9:45 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்ளும் மாலை 6:00 மணிக்கு பிறகும் நடக்கிறது.
அக். 15ல் உற்ஸவ சாந்தியுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவடையும்.
ஏற்பாடுகளை துணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அறங்காவலர்கள், பி.ஆர்.ஓ., முருகன் செய்து வருகின்றனர்.