ADDED : ஜன 21, 2026 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே பெரிய ஊர்சேரி செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தனலட்சுமி பாரம்பரிய கலை அறக்கட்டளை, பாரம்பரிய கலை பயிற்சி மையம் சார்பில் சிலம்ப பயிற்சி முதல் நிலை தகுதிப்போட்டி நடந்தது.
இப்பள்ளி மாணவர்கள் 20 பேர் பங்கேற்றனர். கலை நுட்பங்களை முறையாக பயின்று திறமையை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
முதல் நிலை பட்டய தகுதித் தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் சதீஷ் குமார், சுரேஷ், ராஜா சான்று வழங்கினர். மாணவர்களை பள்ளித் தாளாளர் ரத்தினம் சாமுவேல், ஆசிரியர்கள் பாராட்டினர்.

