/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்களுக்கு தரமான ஆங்கில வழிக்கல்வி
/
மாணவர்களுக்கு தரமான ஆங்கில வழிக்கல்வி
ADDED : செப் 30, 2025 11:54 PM
உசிலம்பட்டி தாலுகா உத்தப்பநாயக்கனுாரில் கிராமப்பகுதி மாணவர்களுக்கு தரமான ஆங்கில வழிக் கல்வி வழங்க வேண்டும் என ஹோலி மதர் மாதா டிரஸ்ட் மூலம் 1983ல் துவக்கப்பட்டது ஜெயசீலன் நினைவு மெட்ரிக் பள்ளி.
தரமான ஆசிரியர்களால் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்கியதால் சிறுகச் சிறுக வளர்ந்து 1991ல் வத்தலக்குண்டு ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2000ல் உசிலம்பட்டி ஜெயசீலன் மேல்நிலைப்பள்ளி, 2003ல் உத்தப்பநாயக்கனுாரில் ரத்தினசாமிநாடார் மேல்நிலைப்பள்ளி என வளர்ந்துள்ளன.
கிராமப்பகுதி ஏழை பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்கான குறைவான கட்டணம் நிர்ணயித்து பயிற்றுவிக்கின்றனர். காற்றோட்டமான வகுப்பறைகள், அனைத்து பாடப்பிரிவுக்கும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் லேப், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்கள், ஆடியோ விசுவல் இணைந்த ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், விளையாட்டு மைதானம் என கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகின்றன.
ஆண்டுதோறும் பள்ளிகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான போட்டிகள் நடத்தி மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.
வத்தலக்குண்டில் ஜெயசீலன் பப்ளிக் ஸ்கூல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டுள்ளது. உத்தப்பநாயக்கனுாரில் விரைவில் ஜெயசீலன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி துவங்கப்பட உள்ளது. தொடர்புக்கு உசிலம்பட்டி 99655 24512, உத்தப்பநாயக் கனுார் 99655 24523.