நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு கூட்டம் நடந்தது.
பொதுமேலாளர் மணி தலைமை வகித்தார். நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் கோமதிநாயகம், இரா. கல்யாண சுந்தரம், நாகராஜ், அருண்குமார், மகளிர் அமைப்பின் சீனிவாசகி, பொதுநல மையத்தின் பாபு ஆகியோர் பங்கேற்றனர். போக்குவரத்து துறையின் குறைபாடுகள், பயணிகள் தேவைகள் குறித்து விவாதித்தனர். அமைப்பாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

