ADDED : நவ 08, 2025 01:56 AM

மதுரை: அனைத்து காலியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மதுரையில் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் நடந்தது.
மதுரை மண்டலத்தில் உள்ள திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி முதல் கன்னியாகுமரி வரையான தென்மாவட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். மாநில பொருளாளர் புகழேந்தி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ராமநாதன், வினோத்குமார், விஜயகுமார், பாலமுருகன், லியாகத்அலி, குமார், ஜாஹிர்உசேன் பேசினர்.
செயற்குழு உறுப்பினர் அருணாசலம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, மாரி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.
ஊராட்சித் தலைவரை நிர்வாக அலுவலராக நியமித்ததை ரத்து செய்து, கிராம ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் சி.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளை மறுவரையறை செய்து புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். 25 கிராமங்களுக்கு மேல் உள்ள ஒன்றியங்களை மறுவரையறை செய்து புதிய ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

