ADDED : பிப் 17, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரைக் கல்லுாரியில் பிப்.,28ல் கல்லுாரி மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி நடக்கிறது.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுவோர் வினாடி வினா போட்டிக்கு தேர்வு பெறுவர். பொதுஅறிவு, அறிவியல், விளையாட்டு போன்ற தலைப்புகளில் வினாக்கள் கேட்கப்படும். முதல் மூன்று இடங்களுக்கு ரொக்கப் பரிசு உள்ளது.
பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 99440 97193ல் பேராசிரியர் வெங்கடேசனை தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.