/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று துவக்கம்
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 01:42 AM
மதுரை : கால்நடை துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று (ஜூலை 2) துவங்குகிறது.
தேசிய நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மதுரையில் 2.07 லட்சம் பசு, எருமைகள் உள்ளன. இவற்றுக்கு வாய், கால் காணை நோய்க்கான (கோமாரி) தடுப்பூசி செலுத்தும் பணி 21 நாட்கள் நடக்கிறது. இதில் விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 31 வரை தடுப்பூசி செலுத்தப்படும்.
கால்நடை வளர்ப்போர் நான்கு மாத கன்று உட்பட அனைத்து வயது பசுக்கள், எருதுகள், சினைமாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தவேண்டும். இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்துவதற்கு முன், 12 இலக்க எண் கொண்ட காது வில்லைகள் அணிவித்து கால்நடை தொடர்பான விபரங்களை பதிவேற்ற மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதற்காக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் 65 குழுக்களை நியமித்துள்ளனர்.