/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளி பயணிகள் நெரிசலை சமாளிக்க ஏற்பாடுகள்: ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

ADDED : அக் 22, 2025 07:42 AM
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தீபாவளியையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் நேற்றுமாலை ஆய்வு மேற்கொண்ட அவர் தெரிவித்ததாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் 11 தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 9 ரயில்கள் மதுரை வழியாக செல்கின்றன. வழக்கமாக இயக்கப்படும் 60 ரயில்களும் கையாளப்பட்டன.
மதுரை ஸ்டேஷனில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதை கண்காணிக்க முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், உதவி வர்த்தக மேலாளர் பணியில் உள்ளனர். நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், கழிப்பறைகளை உடனுக்குடன் சுத்தப்படுத்த கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேவைக்கேற்ப முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் வழங்க கூடுதல் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ், பாதுகாப்பு படை கமிஷனர் செஞ்சையா, உதவி வர்த்தக மேலாளர் மணிவண்ணன், உதவி சுகாதார அதிகாரி சுரேஷ் உடன் இருந்தனர்.