/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பனியுடன் போட்டியிட்டமழை
/
மதுரையில் பனியுடன் போட்டியிட்டமழை
ADDED : டிச 03, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நேற்றிரவு 7:00 மணிக்கு மேல் பனி தொடங்கிய நேரத்தில் எதிர்பாராமல் தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை பெய்ததால் மேலும் குளிர்ந்தது.
காளவாசல், ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், கோரிப்பாளையம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் ரோடு முழுவதும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மழையில் தத்தளித்தபடி சென்றனர். திடீர் மழையால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ஒதுங்கி நின்று மழை விட்டபின் சென்றதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

