sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழை முன்னெச்சரிக்கை அமைச்சர், கலெக்டர் ஆய்வு

/

மழை முன்னெச்சரிக்கை அமைச்சர், கலெக்டர் ஆய்வு

மழை முன்னெச்சரிக்கை அமைச்சர், கலெக்டர் ஆய்வு

மழை முன்னெச்சரிக்கை அமைச்சர், கலெக்டர் ஆய்வு


ADDED : அக் 17, 2024 05:39 AM

Google News

ADDED : அக் 17, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முன் பரவலாக கனமழை கொட்டியது. பல்வேறு நகரங்கள், கிராமங்கள், வயல்வெளி பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதிகளில் தண்ணீர் வடிய அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா உட்பட அதிகாரிகள் நேற்று மழை நீர் தேங்கிய பகுதிகளில் நடக்க வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர். மாட்டுத்தாவணி டி.எம்.நகரில் அமைச்சருடன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அருண்தம்புராஜ், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உடன் சென்றனர்.

தொடர்ந்து வண்டியூர் வரத்து கால்வாய் பகுதியில் பார்வையிட்ட அவர்கள், லேக் ஏரியா, டி.டி.சி., நகர், மீனாட்சிபுரம், ஆபீசர்ஸ் டவுன் பகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

பனங்காடி போலீஸ் செக்போஸ்ட் அருகே தண்ணீர் வரத்து கால்வாயை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து உங்களைத் தேடி திட்டத்தின் கீழ் திருமங்கலம் பஸ்ஸ்டாண்ட், நகராட்சி அறிவுசார் மையத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். மேலும் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு மையத்தில் குறைகளை கேட்டறிந்தார்.

திருநகர்


திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி.நகர், இந்திராநகர், லயன்சிட்டி பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள், மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் இந்திராகாந்தி, உதவி கமிஷனர் ராதா, செயற் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணி, முத்து, உதவி பொறியாளர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us