/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்
/
சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்
ADDED : அக் 28, 2024 04:35 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் கூத்தியார்குண்டு - கருவேலம்பட்டி இடையே ரயில்வே 'அண்டர் பாஸ்' பாலம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
வடிவேலன் என்பவர் கூறுகையில், ''கூத்தியார் குண்டு பகுதியில் இருந்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு செல்லும் பணியாளர்கள், கருவேலம்பட்டி, சம்பகுளத்திற்கு செல்லும் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் அந்தச் சுரங்கப் பாதையை பயன்படுத்துகின்றனர்.
சில நாட்களாக பெய்து வரும் மழையால்சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்ற அமைத்துள்ள மோட்டார் மூலம் தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை.
சுரங்கப்பாதைக்குள் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் செல்வது ஆபத்தாக உள்ளது என்றார்.

