மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு (மி.மீ.,யில்) வருமாறு: மதுரை வடக்கு 16.8, தல்லாகுளம் 4.6, விரகனுார் 2.4, சிட்டம்பட்டி 8.2, கள்ளந்திரி 1, இடையபட்டி 42, தனியாமங்கலம் 18, மேலுார் 20.2, புலிப்பட்டி 6.4, வாடிப்பட்டி 21, உசிலம்பட்டி 4, விமானநிலையம் 14, திருமங்கலம் 7.4, கள்ளிக்குடி 48.
அணைகளில் நீர் இருப்பு n பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.95 அடி (மொத்த உயரம் 152 அடி). 6609 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்குவரத்து வினாடிக்கு 4622 கனஅடி. வெளியேற்றம் வினாடிக்கு 1822 கனஅடி.
n வைகை அணை 69.51 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 5652 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 3017 கனஅடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 2073 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
n சாத்தையாறு அணை 4.6 அடி (மொத்த உயரம் 29 அடி). அணையில் 2.69 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை.

