/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பார்வையாளர் காலரியில் தேங்கிய மழை நீர்
/
பார்வையாளர் காலரியில் தேங்கிய மழை நீர்
ADDED : டிச 03, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்றிரவு 8:00 மணிக்கு இந்திய சுவிட்ச்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் சுற்று நடந்தது.
இரவு 7:00 மணி முதல் மழை பெய்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட காலரியின் நான்கு வரிசை இருக்கைகள் வரை மழை நீர் சாரல் தெளித்தது. இருக்கைகள் முழுவதும் நனைந்ததால் பார்வையாளர்கள் ஓரமாக நின்று போட்டிகளை ரசித்தனர்.
மேலும் காலரி காரிடாரில் மழை நீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. மழை நீர் வெளியேறும் இடத்தில் உள்ள பி.வி.சி., பைப் தரையை விட சற்று உயரத்தில் அமைக்கப்பட்டிருந்ததால் மழைநீர் நிரந்தரமாக தேங்கியது. மழைநீரை மிதித்த படியும், மழையில் நனைந்தபடியும் பார்வையாளர்கள் போட்டிகளை ரசித்தனர்.

