ADDED : டிச 03, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் தேர்வை மறுபரிசீலனை செய்ய கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளி, பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர், ஊராட்சி துணை இயக்குநர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மார்க். கம்யூ., கவுன்சிலர் குமரவேல், சங்க மாவட்டத் தலைவர் மதிபாரதி, நிர்வாகிகள் மாரியப்பன், செல்லம்மாள், மணிகண்டன், ராமலிங்கம், பாண்டியராஜன், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

