ADDED : டிச 03, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கள்ளந்திரி, அரியநாராயணபுரம், குறிஞ்சி நகர் உள்ளிட்ட கிராமங்களில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ, கண் மருத்துவ முகாம்கள், மரம் நடுவிழா, போதை ஒழிப்பு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு விழாவில் முதல்வர் வானதி தலைமை வகித்து மாணவிகளின் சமூக பணியை பாராட்டி பேசினார். பேராசிரியை ஷாகின் வரவேற்றார். பேராசிரியைகள் அமலா, ஞானேஸ்வரி, கள்ளந்திரி அரசு பள்ளி தலைமையாசிரியை கீதா, ஊராட்சி செயலாளர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்ட அலுவலர்கள் ஆறுமுகக்கனி, மீனாட்சி, ஷாகின், பியூலா மேரி, ஷோபா குமாரி ஏற்பாடு செய்தனர்.

