ADDED : டிச 03, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயில் முன்பு அனைந்திந்திய ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோட்டத் தலைவர் ராமர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
மாநகராட்சி துணைமேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார். ரன்னிங் அலவன்ஸ் 25 சதவீத உயர்வு வழங்குதல், அலவன்சில் 70 சதவீதம் வருமான வரி விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. டி.ஆர்.இ.யூ., துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். கோட்டச் செயலாளர் ஜீவா, ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

