ADDED : நவ 08, 2024 07:30 AM

கண்ணனேந்தல்: மாநகராட்சி 8வது வார்டு கண்ணனேந்தல் பொன்விழா நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீனாட்சி நகரின் விரிவாக்கப்பகுதியான இங்கு கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. மாநகராட்சி அதிகாரிகள் பறையாத்திகுளம் கண்மாய் மறுகால் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வெள்ள நீர் வடிந்தது.
பொன்விழா நகர் பகுதி வீடுகள் இன்றும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிவாசிகள் கூறுகையில், ''இங்கு மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர், தார் ரோடு உள்பட அடிப்படை வசதியே இல்லை. பல நாட்களாக காலி பிளாட்டுகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி பெருகி துர்நாற்றம் வீசுகிறது. ஆழ்துளை கிணற்றில் கிடைக்கும் தண்ணீர் மாசடைந்து வருகிறது. புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியுள்ள மழைநீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும்'' என்றனர்.

