/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவில் குளறுபடி ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

ADDED : ஜன 18, 2025 05:27 AM
திருப்பரங்குன்றம் : 'ஆன்லைன் பதிவு சிறந்த திட்டம். ஆனால் அதில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது என்பதற்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உதாரணம்' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அப்பகுதி மக்கள் கலந்து கொள்ள முடியவில்லை. ஆன்லைன் டோக்கன் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆன்லைன் திட்டம் மூலம் வேண்டுமென்றே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளனர். ஆன்லைன் பதிவு என்பது சிறந்த திட்டம் ஆனால் அதில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம மக்களே நடத்த வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு ஜல்லிக்கட்டில் இறக்கும் வீரர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்குவோம். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டிலும் குளறுபடி நடந்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில் அனைத்துமே தவறாகதான் நடக்கிறது என்றார்.