/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியால் எந்த பயனும் இல்லை ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு
/
மாநகராட்சியால் எந்த பயனும் இல்லை ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு
மாநகராட்சியால் எந்த பயனும் இல்லை ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு
மாநகராட்சியால் எந்த பயனும் இல்லை ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு
ADDED : மே 24, 2025 03:41 AM
மதுரை: அ.தி.மு.க., மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நடந்தது.
செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., கூறியதாவது: பெரும்பிடுகு முத்தரையருக்கு அரசு சார்பில் ஆனையூர், வலையங்குளத்தில் 2026ம் ஆண்டில் பழனிசாமி முதல்வராகி சிலை அமைத்து தருவார். மதுரை ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. ரூ.120 கோடி மதுரைக்கு ஒதுக்கப்பட்டதாக அறிக்கையில் கூறுகிறார்கள். ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. பாதாள சாக்கடை திட்டத் பள்ளங்கள் சரி செய்யப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. இன்றைக்கு தி.மு.க., அரசு தகுதியற்ற அரசாக உள்ளது. மதுரை மாநகராட்சியால் மக்களுக்கு எந்த திட்டங்களும் இல்லை, பயனும் இல்லை என்றார்.
எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வாசு, நிலையூர் முருகன்,பொன். ராஜேந்திரன், சேனாபதி, பார்த்திபன், கோட்டை காளை, வெற்றிச்செழியன், கார்த்திகேயன், பகுதி செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.