/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமிக்கு பதில் கூற உதயநிதி யார்? ராஜன் செல்லப்பா கேள்வி
/
பழனிசாமிக்கு பதில் கூற உதயநிதி யார்? ராஜன் செல்லப்பா கேள்வி
பழனிசாமிக்கு பதில் கூற உதயநிதி யார்? ராஜன் செல்லப்பா கேள்வி
பழனிசாமிக்கு பதில் கூற உதயநிதி யார்? ராஜன் செல்லப்பா கேள்வி
ADDED : நவ 14, 2024 06:52 AM
திருப்பரங்குன்றம் ; ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பதில் அளிக்க உதயநிதி யார்'' என அ.தி.மு.க., மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் நிறைவேற்றப்படாத குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மோசமான சாலைகள், கனிமவள கடத்தல் ஆகியவற்றை கண்டித்து நவ. 16ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதற்கான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு நேற்று விநியோகிக்கப்பட்டது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன் துவக்கி வைத்தனர்.
ராஜன் செல்லப்பா கூறியதாவது: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் இருந்த மணலை அள்ளிச் சென்று விட்டனர். இதற்கு நெடுஞ்சாலை, நீர் நீர்வளத் துறை, மாநகராட்சி மூவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்கின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் விவாதிக்க தயார் என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். பழனிசாமி முதல்வரைத் தான் அழைத்தார். உதயநிதி யார். முதல்வர் எப்போது தயாராக இருக்கிறாரோ, அப்போது விவாதிக்கலாம். முதல்வர் ஸ்டாலின் 2026ல் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது என்றார். நிர்வாகிகள் பாலமுருகன், செல்வகுமார், பாலா கலந்து கொண்டனர்.

