sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து உயிர் காப்பாற்றும் தொழில்நுட்பம்; கண்டுபிடித்தார் ராஜபாளையம் மாணவர் தயா விஷ்ணு குமரன்

/

உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து உயிர் காப்பாற்றும் தொழில்நுட்பம்; கண்டுபிடித்தார் ராஜபாளையம் மாணவர் தயா விஷ்ணு குமரன்

உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து உயிர் காப்பாற்றும் தொழில்நுட்பம்; கண்டுபிடித்தார் ராஜபாளையம் மாணவர் தயா விஷ்ணு குமரன்

உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து உயிர் காப்பாற்றும் தொழில்நுட்பம்; கண்டுபிடித்தார் ராஜபாளையம் மாணவர் தயா விஷ்ணு குமரன்


ADDED : நவ 02, 2025 03:38 AM

Google News

ADDED : நவ 02, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரா ஜபாளையம் மாணவர்தயா விஷ்ணு குமரன் 15 வயதிலே இளம் விஞ்ஞானியாக வலம் வருகிறார். இவர் மத்திய அரசின் அடல் இனோவேஷன் மிஷனில் இந்தியாவின் முதல் நுாறு மாணவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.தேசிய வணிக யோசனை போட்டியில் தேசிய அளவில் 2ம் இடம், தற்போது ஹரியானாவில் நடந்த சி.பி.எஸ்.இ., தேசிய அறிவியல் கண்காட்சியில் வெற்றி என எட்டுத்திக்கும் அறிவாற்றலால் சாதிக்கிறார். வயதானோர், கிராமப்புற மக்களின் உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து அவசர காலத்தில் உயிர்க் காக்க உதவிடும் தொழில்நுட்பமும், அதற்கான செயலியையும் கண்டுபிடித்துள்ளார் என்பது இவரது சமீபத்திய சாதனை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்ஸ்ரீரமணா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் இவர் கூறியதாவது...

தந்தை முத்துக்குமரன், தாய் வைதேகி. 10ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. அப்போது எல்லோருக்கும் தரமான, தேவையான நேரத்தில் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதி இல்லை என்பதை செய்திகள் மூலம் தெரிந்துக் கொண்டேன். அதனால் எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஒரு கண்டுபிடிப்பு செய்ய விரும்பினேன்.

கிராமப்புறங்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களின் மருத்துவமனை துாரம், இணைய இணைப்பு பற்றாக்குறை, போக்குவரத்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பல உயிர்கள் இழக்கப்படுகின்றன. இதே நேரம், மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டிற்கும் ஒரே தீர்வாக 'ஸ்மார்ட் சிஸ்டம் பார் அட்வான்ஸ்ட் ஹெல்த்கேர்' எனும் புதுமையான சுகாதார அமைப்பை உருவாக்கினேன். இது ஒரு ஹார்டுவேர். இது செயல்பட, மக்கள் எளிதில் பயன்படுத்தசெயலியும் தேவை. இதன் நோக்கம் நேரடி உடல்நிலை கண்காணிப்பு, அவசரநிலை உதவி, மனநல பராமரிப்பு. இதனோடு உருவாக்கப்பட்ட செயலி தான் 'Varrummun Kaappom' என்ற செயலி.

இதயத் துடிப்பு சென்சார் மூலம் இதயத்துடிப்பு சரியான வரம்பில் உள்ளதா என கண்காணிக்கிறது. டி.எச்.டி., 11 வெப்பநிலை சென்சார் மூலம் உடல் வெப்பநிலையை அளந்து, காய்ச்சல் அல்லது வெப்ப அழுத்தத்தை கண்டறிகிறது.ஏ.டி.எக்ஸ்.எல்.,345 ஆக்சிலரோமீட்டர் மூலம் திடீரென தவறி விழுதல் போன்ற இயக்கத்தை உடனே கண்டறிகிறது. ஜி.எஸ்.ஆர்., சென்சார் மூலம் தோல் மின்தடிப்பு மாற்றங்கள் மூலம் மனஅழுத்தம், உணர்ச்சி நிலைகளை அளக்கிறது.

சென்சார்களிருந்து தரவு சாதாரண அளவை மீறினால், துல்லியமான இருப்பிடத்தை கண்டறிந்து, குடும்பத்தினர், அருகிலுள்ள மருத்துவமனை அல்லது ஆம்புலன்சுக்கு குறுந்தகவல், அழைப்பு விடுக்கிறது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால்புளூடூத் அல்லது வைபை வசதி இல்லாத கிராமப்புறங்களிலும் இது தடையின்றி செயல்படும்.

இந்த அமைப்பின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது வரும்முன் காப்போம் என்ற மொபைல் செயலி. இதில் உடற்பயிற்சி கண்காணிப்பு, அவசர இரத்த தேவை எச்சரிக்கை, இரத்த தானம் செய்வோர் பட்டியல், ஆடியோ, வீடியோ மூலமாக மருத்துவ ஆலோசனை பெறும் வசதிகள் உள்ளன. இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் அருகிலுள்ள மருத்துவரை கண்டுபிடிக்கக்கூடிய சிறப்பும் இதில் உள்ளது. இதனுடன், செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் மூலம் உடல் தரவுகளை பகுப்பாய்வு செய்து, முன்கூட்டியே எச்சரிக்கை வழங்குவதோடு, மன அழுத்த அறிகுறிகளையும் கண்டறிந்து, தற்கொலை முயற்சிகளை தடுக்கும் விதமாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது

இதை பள்ளியில் மத்திய அரசின் நிடி அயோக் திட்டத்தின் கீழ் செயல்படும் அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் உதவியோடு உருவாக்கினேன். பெற்றோர், முதல்வர் கல்யாணி, ஆலோசகர் டாக்டர் கு.கணேசன், வழிகாட்டு அலுவலர் பிரசன்னா உறுதுணையாக இருந்தனர்.தற்போது பிரான்ஸ்சின் டெசால்ட் நிறுவனம் எனக்கு இன்டெர்ன்ஷிப் வழங்கியுள்ளது,என்றார்.






      Dinamalar
      Follow us