/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமி தமிழக முதல்வராக பா.ஜ.,வினரை துாண்டினால் போதும் அண்ணாமலைக்கு செல்லுார் ராஜூ 'அட்வைஸ்'

ADDED : ஆக 30, 2025 04:10 AM
மதுரை: ''பழனிசாமி முதல்வராக அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம்; பா.ஜ.,வினரை துாண்டி விட்டால் போதும்' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
மதுரை நகர் பகுதிகளில் செப்.,2, 3ல் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதற்கான வாகனத்தை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லுார் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
செல்லுார் ராஜூ கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மதுரை மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வராக இருந்த பழனிசாமி தந்துள்ளார். குறிப்பாக முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொடுத்ததன் மூலம் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்த தர்மபிரபுவாக திகழ்கிறார்.
தி.மு.க.,வின் காழ்ப்புணர்ச்சியால் மாநகர பகுதிகளில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஊழல் நிறைந்த மாநகராட்சியில் ஊழல் மேயர் இந்திராணி தீர்மானங்கள் நிறைவேற்றியது வேடிக்கை. கோயில் மாநகராட்சியாக இருந்த நிலையில், சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மதுரை மாநகராட்சி மீது உலகமே காரி துப்பும் நிலைக்கு தி.மு.க. மாற்றியுள்ளது.
சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லை. பழனிசாமி மீண்டும் முதல்வராக ஆட்சியில் அமர பா.ஜ.,வின் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம். பா.ஜ.,வினரை துாண்டிவிட்டால் போதும்.
2026ல் மீண்டும் பழனிசாமி முதல்வராக வருவார் என்றார்.