/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய சோதனை ஓட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

ADDED : டிச 18, 2024 05:52 AM
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தாக்கலான வழக்கில் ஓலைகுடாவில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சோதனை ஓட்டம் துவங்கியுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நகராட்சி பகுதி கழிவு நீர், குப்பை கலக்கின்றன. கழிவுநீர் கலப்பதை தடுக்க கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
நகராட்சி தரப்பு: அக்னி தீர்த்தத்திலிருந்து 4 கி.மீ., துாரத்திற்கு அப்பால் ஓலைகுடாவில் ரூ.52.60 கோடியில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான சோதனை ஓட்டம் டிச.15 ல் துவங்கியுள்ளது. கழிவு நீரை கடலில் கலக்கவிடமாட்டோம். சுத்திகரிக்கப்படும் நீர் அரசு புறம்போக்கு நிலத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு மரங்கள், புற்கள் நட்டு பராமரிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி நகராட்சி கமிஷனர் கண்ணன் ஆஜரானார். அவர் எதிர்காலத்தில் இவ்வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்களித்த நீதிபதிகள் ஜன.27 க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.