/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுகர்வோரிடம் ரேஷன் விற்பனையாளர்கள் தந்திரம்.. 'நாளைக்கு வாங்க...'!பொருட்களை வெளி சந்தையில் விற்பதாக புகார்
/
நுகர்வோரிடம் ரேஷன் விற்பனையாளர்கள் தந்திரம்.. 'நாளைக்கு வாங்க...'!பொருட்களை வெளி சந்தையில் விற்பதாக புகார்
நுகர்வோரிடம் ரேஷன் விற்பனையாளர்கள் தந்திரம்.. 'நாளைக்கு வாங்க...'!பொருட்களை வெளி சந்தையில் விற்பதாக புகார்
நுகர்வோரிடம் ரேஷன் விற்பனையாளர்கள் தந்திரம்.. 'நாளைக்கு வாங்க...'!பொருட்களை வெளி சந்தையில் விற்பதாக புகார்
ADDED : மார் 27, 2024 07:22 AM

மதுரை : கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு இருந்தும் 'நாளை வாங்க' என்று சொல்வதால் அந்த பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவற்றை விற்பனையாளர்களே வெளிமார்க்கெட்டில் விற்கும் நிலை உள்ளது.
அரிசி பருப்பு, பாமாயில் சீனி கோதுமை பச்சரிசி ஆகியவை எப்போதும் கூட்டுறவு ரேஷன் கடைகளில் இருப்பு இருக்கும். ஆனால் பல ரேஷன் கடை விற்பனையாளர்கள் இவற்றை ஒரே நாளில் வழங்குவதில்லை. குறைந்தபட்சம் ஒரு ரேஷன் கார்டுக்கு 12 கிலோ அரிசி அதாவது பச்சரிசி புழுங்கல் அரிசி கோதுமை ஆகியவற்றை உள்ளடக்கிய 12 கிலோவாக வழங்க வேண்டும். மூன்று பேர் உள்ள வீட்டினருக்கு மாதம் 20 கிலோ அரிசி வழங்கவேண்டும். ஆனால் பாதியளவே கடைகளில் வழங்குகின்றனர்.
பச்சரிசி கேட்டால் இருப்பு இல்லை என்று கைவிரிக்கின்றனர். மேலும் வரத்து இல்லை என்று கோதுமையை வழங்குவதே இல்லை. பருப்பு கிலோ ரூ. 30, பாமாயில் ரூ.25, ஜீனி கிலோ ரூ.30க்கு வாங்கினாலும் மற்ற அனைத்து பொருட்களும் இலவசம் தான். கூடுதலாக ரூ.100க்கு சோப்பு ஷாம்பு டீத்துாள் ரவை மைதா பொரிகடலை என ஏதாவது ஒரு பொருளை வாங்கினால் மட்டுமே மற்ற பொருட்களுக்கு அனுமதி வழங்குகின்றனர்.
ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வழங்குவதில்லை. குறிப்பாக மற்ற பொருட்களை கொடுத்துவிட்டு அரிசி இருப்பு இல்லை இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். 50 சதவீதம் பேர் இரண்டாவது முறையாக கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. ஆனால் முதல் முறை கார்டில் பதியும் போதே அனைத்து பொருட்களும் வாங்கியதாக கம்ப்யூட்டரில் பதிந்து விடுகின்றனர். இதனால் கார்டுதாரர் அரிசி வாங்காவிட்டாலும் அந்த கார்டுக்குரிய அரிசி கடையில் இருப்பு இருப்பதால் அவற்றை வெளிமார்க்கெட்டில் விற்று லாபம் பார்க்கின்றனர். எந்த பொருள் வாங்குகின்றனரோ அந்த பொருளுக்கு மட்டும் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும் என கார்டுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இணைப்பதிவாளர் குருமூர்த்தி கூறியதாவது: அத்தியாவசிய பொருட்களை தான் விற்க சொல்கிறோம். வெளிமார்க்கெட்டில் விற்பதை விட குறைந்த விலைக்கு நாங்கள் விற்பதால் இதனை அனுமதிக்கிறோம். இந்த பொருள் வாங்கினால் தான் ரேஷன் பொருள் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
மேலும் கோதுமை வரத்து மிக குறைவாக உள்ளது. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கார்டுதாரர்களுக்கு கோதுமையும் மாதந்தோறும் பாமாயில் பருப்பு சீனி கட்டாயம் வழங்க வேண்டும். அரிசி கார்டுக்கு ஏமாற்றுவது தெரிந்தால் துணைப் பதிவாளரிடம் புகார் செய்யலாம். கடை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வாட்ஸ் அப்பில் புகார் செய்ய: 90804 20195.

