/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பி.எப்., தொகையை பிடித்தம் செய்தால் கணக்கில் செலுத்துவதில்லை ரேஷன் கடை பணியாளர்கள் குமுறல்

ADDED : ஏப் 11, 2025 02:33 AM
மதுரை:சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பி.எப்., தொகையை பி.எப்., அலுவலக கணக்கில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் செலுத்தாததால் அவசரத் தேவைக்கு பி.எப்., தொகையை எடுக்கமுடியவில்லை என அரசு ரேஷன் கடை பணியாளர்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ஜெயச்சந்திர ராஜா, துணைத்தலைவர் செல்லதுரை கூறியதாவது: கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 32 ஆயிரம் பகுதிநேர, முழுநேர ரேஷன் கடைகளில் 23 ஆயிரத்து 500 பணியாளர்கள் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சம்பளம் பெறுகின்றனர். சங்க செயலாளர்கள் மாதந்தோறும் பி.எப்., தொகையை பிடித்தம் செய்து மீதி சம்பளத்தை அனுப்புகின்றனர். தேவைக்கு பணம் எடுக்கச் செல்லும் போது தான் எங்கள் தனிப்பட்ட பி.எப்., கணக்குகளில் பிடித்தம் செய்த தொகை செலுத்தப்படவில்லை என தெரியவருகிறது.
'ஓராண்டு தொகையுடன் 200 சதவீத வட்டி கட்டினால் தான் பணத்தை எடுக்க முடியும்' என்று பி.எப்., அலுவலகத்தில் தெரிவிக்கின்றனர். வேறு வழியின்றி நாங்களே வட்டி கட்ட வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது.
பணியிடம், சம்பளம் என கூட்டுறவுத்துறையின் கீழ் நாங்கள் வேலை பார்த்தாலும் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு துறையின் கீழ் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அரசின் திட்டங்கள் எங்கள் மூலமே நிறைவேற்றப்படுவதால் எங்களையும் அரசுத்துறை ஊழியராக்கி ஒன்பதாவது ஊதியக்குழுவின் கீழ் சேர்த்து முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.