/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் விற்பனை இயந்திரங்களில் 'நெட்' இணைப்பின்றி சுத்திக்கிட்டே இருக்குது! நிறைய இடங்களில் ' 2 ஜி' சேவையை தாண்டாத கொடுமை

ADDED : ஆக 27, 2024 01:35 AM

மதுரை : மதுரையில் கூட்டுறவுத்துறைக்குட்பட்ட ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் விரல் ரேகை மற்றும் விற்பனையை பதிவு செய்யும் விற்பனை முனைய இயந்திரத்தில் (பி.ஓ.எஸ்.) இன்றளவும் ' 2 ஜி' சேவையே உள்ளதால் 'நெட்வொர்க்' இணைப்பு கிடைக்காமல் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
நுகர்வோருக்கு தாமதம் ஆகிறது என்பதால் இயந்திரத்தில் உள்ள 'சிம்'முக்கு பதிலாக எங்களது அலைபேசியை பயன்படுத்துகிறோம். எனவே ' 4 ஜி ' சேவை வழங்க வேண்டும் என்கின்றனர் ரேஷன் கடை விற்பனையாளர்கள்.
அவர்கள் கூறியதாவது: கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விரல் ரேகையும் ரேஷன் கார்டு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு கடந்த 2006 முதல் புதிய 'பி.ஓ.எஸ்.' இயந்திரம் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டது. மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் விரல் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்த பின், என்னென்ன பொருட்கள் தேவை எனக் கணக்கிட்டு பதிவு செய்து ரசீது வழங்கப்படும்.
பெரும்பாலான கடைகளில் உள்ள இந்த இயந்திரத்தில் ' 2 ஜி' சிம்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கார்டுதாரர் ரேகையை பதிவு செய்ய இயந்திரத்தில் விரலை வைத்தால் இணையதள சேவை சுற்றிக் கொண்டே இருக்கிறது. இணைய சேவை பாதிக்கப்படுவதால் அந்த சிம்முக்கு பதிலாக எங்களது சொந்த அலைபேசி சிம் வழியாக இணையசேவையை மேற்கொள்கிறோம்.
இதிலும் சிலர் '3 ஜி' சேவை மட்டுமே பெற்றிருப்பதால் கார்டுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரேகை மற்றும் பொருட்களை பதிவு செய்ய கால் மணி நேரமாகிறது. கடையில் 10, 15 பேர் வரிசையில் நின்றால் அரைநாள் வீணாகிறது. தாமதத்தால் நுகர்வோர் எங்களிடம் சண்டையிடுகின்றனர்.
இயந்திரம் பழுதாகி விட்டதென, புதிது கேட்டால் புதிய அட்டைப் பெட்டியில் பயன்படுத்திய பழைய இயந்திரத்தை வைத்து கொடுக்கின்றனர். நுாற்றுக்கு 10 இயந்திரங்களே புதிதாக கிடைக்கிறது. ஆனால் புதிய இயந்திரம் வாங்கியதாக பதிவேட்டில் ஆவணப்படுத்துகின்றனர். பழுதடைந்த இயந்திரத்தை மாற்றுவதோடு சிம் இணைப்பையும் '4 ஜி' சேவைக்கு விரிவுபடுத்த வேண்டும் என்றனர்.