ADDED : ஏப் 23, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, பேரையூர், உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள 550 க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் செல்லத்துரை கூறுகையில் ''பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும். ரேஷன் கடை பொருட்களுக்கு சரியான எடை போட்டு பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்'' என்றார். கோரிக்கைகளை மனுவாக தாசில்தார் சுரேஷிடம் ரேஷன் கடை ஊழியர்கள் அளித்தனர்.