/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் பணியாளர்கள் 2ம் நாள் வேலை நிறுத்தம்
/
ரேஷன் பணியாளர்கள் 2ம் நாள் வேலை நிறுத்தம்
ADDED : அக் 23, 2024 04:48 AM
உசிலம்பட்டி,: உசிலம்பட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட கவுரவ தலைவர் ராஜா, இணை செயலாளர்கள் மகேந்திரன், நீதிமுத்தையா, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது எடை குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் அபராதத் தொகை உயர்த்தியதை குறைக்க வேண்டும், கூட்டுறவுத் துறை பதிவாளர்கள் உத்தரவுப்படி சோப்பு, மாவு, உப்பு, டீத்துாள் விற்க விற்பனையாளர்களை வலியுறுத்தக் கூடாது, அந்தந்த மாவட்டத்தில் கடைக்கு அருகே பணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேரையூர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பேரையூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரையூர் தாலுகாவில் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதித்தது. கூட்டுறவு கடன் சங்கங்கள் பூட்டி இருந்ததால் வாடிக்கையாளர்கள் பாதித்தனர்.