/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பசுமைப் பள்ளிகள் பொங்கல் கொண்டாட ரூ.5000 உண்டு 'சமத்துவத்துக்கு' கைவிரிப்பு அரசு பள்ளிகளுக்கு இல்லாததால் ஆசிரியர்கள் ஆதங்கம்

ADDED : ஜன 14, 2026 06:54 AM

ஆண்டு தோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி நேற்று பெரும்பாலான அரசு பள்ளிகளில் 'சமத்துவ பொங்கல்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.
அதேநேரம் 'பசுமை பள்ளி'யாக தேர்வான பள்ளிகளுக்கு வனத்துறை சார்பில் ஒதுக்கிய தலா ரூ.5 ஆயிரம் நிதியில் 'புகையில்லா பொங்கல்' கொண்டாட மாநில அளவில் அனுமதிக்கப்பட்டது.
மதுரையில் மாநகராட்சி பள்ளி உட்பட உயர், மேல்நிலைகளில் 45 'பசுமை பள்ளி'களில் 'புகையில்லா பொங்கல்' கொண்டாட அனுமதிக்கப்பட்டது. பசுமைப் படை நிதியில் பொங்கல் வைத்து, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். கல்வித்துறையில் திடீரென 'சமத்துவ பொங்கல்' என்ற பெயரில் விழாவை கொண்டாட அறிவுறுத்தியது.
ஜாதி, மத பேதமின்றி மாணவர், ஆசிரியர்கள் ஒன்றுகூடி பள்ளி வளாகத்தில் விறகு அடுப்புக் கூட்டி மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாட வேண்டும் என்பது நோக்கம். ஒரு பள்ளியில் கரும்பு கட்டுடன் பொங்கல் கொண்டாட குறைந்தது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. இதை ஆசிரியர்களே ஏற்கிறோம்.
அதேநேரம் 'பசுமை பள்ளி'களில் 'புகையில்லா பொங்கல்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு பசுமைப்படை சார்பில் ஒதுக்கிய ரூ.5 ஆயிரம் நிதியில் இருந்து பொங்கல் விழாவுக்கு செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அப்பள்ளிகளில் காஸ் சிலிண்டர் மூலம் பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது. 'சமத்துவ பொங்கல்' எனக் கூறி சில பள்ளிகளுக்கு மட்டும் பசுமை நிதியை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள், மாணவர்களின் மனதில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தாதா என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சி.இ.ஓ., தயாளன் கூறுகையில், ''புகையில்லா பொங்கல் கொண்டாட மதுரையில் 45 பள்ளிகளை வனத்துறையினரே தேர்வு செய்துள்ளனர். அதனால் அவர்கள் வழங்கிய நிதியில் கொண்டாடப்படுகிறது'' என்றார்.