நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வாசகர் வட்டம் சார்பில் அல்அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 'வாசிப்பை வசியப்படுத்தும் வழிகள்' என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.
வாசகர் வட்ட அமைப்பாளர் சண்முகவேலு தலைமை வகித்தார். பேராசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் மூரா, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார். கவிஞர் ரவி படைப்பாற்றலை வளர்க்கும் வழிகள் என்ற தலைப்பில் பேசினார். தலைமை ஆசிரியர் ஷேக்நபி, அனார்கலி, தியாகராஜன், வாசகி பிரியதர்ஷினி பேசினர்.