ADDED : பிப் 29, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன் 151 பேருக்கு அடையாள, ரயில் பயண அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கினார். பி.டி.ஓ., க்கள் கார்த்தியாயினி, ஜெயபாலன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மேற்பார்வையாளர் முத்துசாமி, சிறப்பு பயிற்றுநர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

