/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காட்டு பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் மீட்பு
/
காட்டு பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் மீட்பு
காட்டு பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் மீட்பு
காட்டு பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் மீட்பு
ADDED : மார் 02, 2024 05:39 AM
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காட்டு பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான பல்லாண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 25 கோடி மதிப்பிலான 1.27 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
திருமங்கலம் வேங்கட காட்டு பத்திரகாளியம்மன் கோயில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
விமான நிலைய ரோட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 25 கோடி. இந்த நிலத்தை திருமங்கலத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்.
கடந்த 2006ல் இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என அப்போதைய கலெக்டரால் பட்டா வழங்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தவரிடம் தரை வாடகை வசூலிக்கப்பட்டது. அந்த நபர் அந்த இடத்தை அருகேயுள்ள மற்றொரு நிறுவனத்திற்கு உள்வாடகைக்கு விட்டுள்ளார்.
இதையடுத்து கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை அந்த நபர் செலுத்தாமல் இருந்து உள்ளார். 2021 வரை ரூ. 30 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது. இடத்தை கைப்பற்ற முயற்சித்த போது அந்த நபர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். வாடகை பாக்கியில் மூன்றில் ஒரு பகுதியை செலுத்தினால் இடைக்கால தடை விதிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் பணம் செலுத்தாமல் இருந்ததால் இடத்தை கைப்பற்ற ஹிந்து சமய அறநிலையத்துறை மதுரை இணை ஆணையருக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் உதவி ஆணையாளர் வளர்மதி, கோயில் நிலங்கள் தனித்தாசில்தார் சிவக்குமார், ஆய்வாளர் சாந்தி, செயல் அலுவலர் அங்கையற்கண்ணி மற்றும் அலுவலர்கள், போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.

