/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு ரெட் அலர்ட் : மின்வாரியம் எச்சரிக்கை
/
மதுரைக்கு ரெட் அலர்ட் : மின்வாரியம் எச்சரிக்கை
ADDED : அக் 19, 2025 10:28 PM
மதுரை: மதுரை மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
இதையடுத்து மதுரை பெருநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் டிரான்ஸ்பார்மர் உட்பட மின்சாதனங்கள் அருகில் செல்லாமலும், அடியில் தீபாவளி பட்டாசுகளை கொளுத்துவதை தவிர்க்கவும் வேண்டும் என எச்சரித்துள்ளார்.
மின்பாதிப்புகள் ஏற்பட்டால் பின்வரும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார். மதுரை வடக்கு தமுக்கம், தல்லாகுளம், பகுதியினர் 94458 52932, கே.கே.நகர், உத்தங்குடி- 94458 52851, புதுார், சூரியாநகர் - 94458 52847, மேலமடை, வண்டியூர் - 94458 52849, திருப்பாலை, பார்க்டவுன்- 94458 52855, அண்ணாநகர், சதாசிவநகர்- 94458 52850, சுப்ரமணியபுரம், தெற்குவெளிவீதி- 94458 52945, மீனாட்சி அம்மன் கோயில், குயவர்பாளையம் ரோடு- 94458 52951, அனுப்பானடி, முனிச்சாலை- 94458 52939, விளாங்குடி, கோச்சடை, கீழவாசல் - 94458 52958, எஸ்.எஸ்.காலனி, திருநகர் வரை- 94458 52957.