/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாய்மை பணியாளர்களின் அக்.21 போராட்டம் வாபஸ்
/
துாய்மை பணியாளர்களின் அக்.21 போராட்டம் வாபஸ்
ADDED : அக் 19, 2025 10:27 PM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்த 23 தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் தொழிற்சங்கங்கள் சார்பில் அக். 21 முதல் நடக்கவிருந்த வேலைநிறுத்த போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம், எல்.எல்.எப்., தொழிலாளர் மேம்பாட்டு சங்க அமைப்பாளர் பூமிநாதன் கூறியதாவது: அவர்லேண்ட் நிறுவனம் 23 தொழிலாளர்களை பொய் குற்றச்சாட்டில் சட்டத்திற்கு புறம்பாக பணி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து சி.ஐ.டி.யு., உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் அக்.21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா ஏற்பாட்டில், தொழிற்சங்க பிரதிநிதிகள், அவர்லேண்ட் நிறுவனம் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர். முடிவில் நிறுவனம் பணி நீக்கம் செய்த 23 தொழிலாளர்களையும் உடனே பணியில் சேர்க்கவும், தீபாவளிக்கு முன்பு அட்வான்ஸ் வழங்கவும் ஒப்புக்கொண்டது.
எனவே தொழிற் சங்கங்கள் அக். 21 ல் நடத்த இருந்த வேலைநிறுத்தம் கைவிடப்படுகிறது என்றனர்.