/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீரர்களுக்கு சிவப்பு கம்பளம்: ரசிகர்களுக்கு சகதி; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் அவலம்
/
வீரர்களுக்கு சிவப்பு கம்பளம்: ரசிகர்களுக்கு சகதி; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் அவலம்
வீரர்களுக்கு சிவப்பு கம்பளம்: ரசிகர்களுக்கு சகதி; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் அவலம்
வீரர்களுக்கு சிவப்பு கம்பளம்: ரசிகர்களுக்கு சகதி; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் அவலம்
ADDED : நவ 25, 2025 11:45 PM

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மழை பெய்தாலே ஆங்காங்கே தண்ணீர் தேங்கி விடும். சர்வதேச ஹாக்கி அரங்கு அமைப்பதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டியதாலும், கனரக வாகனங்கள் வந்து சென்றதாலும், முன்புற நுழைவாயிலில் இருந்து ஹாக்கி அரங்கு செல்லும் ரோடு முழுமையாக சேதமடைந்துள்ளது.
நடந்து செல்லும் போது அரையடி ஆழத்திற்கு கால் புதையும் அளவுக்கு மோசமாக உள்ளது.
இதைத்தாண்டி தான் பயிற்சி ஆட்டம் நடக்கும் மினி ஹாக்கி அரங்கிற்கு செல்ல வேண்டும். இந்த சகதியில் கால் வைத்து அரங்கின் புல்தரையில் கால் வைத்தால் தரை முழுதும் சேறாகி விடும்.
இங்கு, 1,200 பேர் அமரும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கேலரியை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. கேலரி செல்வதற்கு முன்பாக சேறு, சகதியில் தான் செல்ல வேண்டும்.
ஒருபக்கம் சர்வதேச தரத்தில் ஹாக்கி அரங்கு, பார்வையாளர் கேலரி, வி.ஐ.பி., கேலரி, முழுதும் குளிரூட்டப்பட்ட அரங்கு, வெளிநாட்டு வீரர்கள் அமர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், போட்டிகளை ரசிக்க வரும் உள்ளூர் பார்வையாளர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.
தற்காலிக கேலரிக்கு செல்ல, மைதானத்தின் வெளிப்பக்க நுழைவாயில் வழியாக தனிப்பாதை உள்ளது. இதன் அருகில், 5 நடமாடும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
இது போதாது என்பதால், பார்வையாளர்கள் மைதானம் உட்புறமுள்ள நிரந்தர கழிப்பறைகளுக்கு செல்ல வேண்டும்.
அந்த பாதை முழுதும் சகதியாக காணப்படுகிறது. போட்டி துவங்க இரு நாட்களே உள்ள நிலையில், விரைந்து சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

