ADDED : நவ 25, 2025 05:07 AM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மகளிர் பிரிவு 14 வயது, 16 வயதினருக்கான அஸ்மிதா தடகள லீக் போட்டிகள் நடந்தன. மாநில, மாவட்ட தடகள சங்கங்கள் ஏற்பாடுகளை செய்தன.
மாவட்ட சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஒலிம்பிக் முன்னாள் வீரர், வீராங்கனைகள் ரேவதி,திருஞான துரை, சோலைமதி ஆகியோர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். செயலாளர் உஸ்மான் அலி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளர் வேல்முருகன் கலந்து கொண்டனர்.
போட்டி முடிவுகள் 14 வயது டிரையத்லான் ஏ பிரிவில் அக் ஷிதா, வெண்பாம், ஹேமஸ்ரீ, ஈட்டி எறிதலில் மித்ரா, தான்வி, ரேஷ்மா வெற்றி பெற்றனர். 16 வயது ஈட்டி எறிதலில் ஷிவாஷினி, யோகிதா, மோனிகா, 60 மீட்டர் ஓட்டத்தில் ஷர்மிளா, ராஜஸ்ரீ, அஸ்மிதா, உயரம் தாண்டுதலில் அனன்யா, ராஜவர்ஷினி, நீளம் தாண்டுதலில் ஹர்ஷிதா, கிருத்திகா, லாவண்யா, வட்டு எறிதலில் நாகதர்ஷினி, வியோமிதா, கவிஸ்ரீ, குண்டு எறிதலில் இந்துமதி, கனிஷ்கா, லக்ஷனா வெற்றி பெற்றனர்.

