/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டுறவு ஊழியருக்கு குறைக்கப்பட்ட வாடகைப்படி அக்.7 முதல் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்
/
கூட்டுறவு ஊழியருக்கு குறைக்கப்பட்ட வாடகைப்படி அக்.7 முதல் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்
கூட்டுறவு ஊழியருக்கு குறைக்கப்பட்ட வாடகைப்படி அக்.7 முதல் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்
கூட்டுறவு ஊழியருக்கு குறைக்கப்பட்ட வாடகைப்படி அக்.7 முதல் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்
ADDED : செப் 20, 2025 05:36 AM
மதுரை: கூட்டுறவு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியை குறைத்ததை கண்டித்து அக்.,6ல் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் போராட்டத்தை துவக்குகிறது. அக்., 7 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடக்கிறது.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 4500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் சங்கங்களின் கட்டுப்பாட்டில் 32,500 ரேஷன் கடைகளும் உள்ளன. 2018க்கு பிறகு 2023ல் ஊழியர்களுக்கு வாடகைப்படி உயர்த்தி ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியானது. அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வீட்டு வாடகைப்படி கிடைத்தது. தற்போது வாடகைப்படியை 50 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளனர். இதில் 800 சங்க ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் எடுத்த நிலையில் இந்த அறிவிப்பு குழப்பம் ஏற்படுத்தியுள்ளது என்கிறார் சங்க மாநில கவுரவ பொதுசெயலாளர் குப்புசாமி.
எங்க தலையில் கட்டுறாங்க அவர் கூறியதாவது: இது அரசு தரும் பணம் இல்லை. கூட்டுறவு சங்கத்தில் இருந்து தான் எங்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. நிர்வாகிகள் தேவையில்லாமல் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து துணைப்பதிவாளர்கள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு வீட்டு வாடகைப்படியை குறைத்துள்ளனர். அதை மீண்டும் சரிசெய்ய வேண்டும். சங்கங்கள் சார்பில் முதல்வர் மருந்தகங்கள் நடத்துகிறோம். மருந்துகள் விற்காவிட்டாலும் தினமும் ரூ.1000க்கு விற்றதாக ரசீது போட சொல்கின்றனர். அந்த தொகையை எங்கள் தலையில் கட்டுகின்றனர். கூட்டுறவு சங்க பதிவாளரை சந்தித்து விளக்கிய போது சரிசெய்வதாக சொன்னார். அதே நிலை தான் நீடிக்கிறது.
விவசாய கருவிகளை சங்கங்களின் பெயரில் கடன் வாங்கி வாடகைக்கு விட சொல்கின்றனர். வாடகைக்கு எடுக்காத நிலையில் சங்கங்களுக்கு கடன் சுமை ஏறுகிறது. ரேஷன் கடைகளிலும் வரைமுறையில்லாமல் பொருட்களை கொடுத்து நுகர்வோரிடம் விற்கச் சொல்கின்றனர். ஓரளவுக்கு மேல் எங்களால் விற்பனை செய்ய முடியவில்லை.
ஆர்ப்பாட்டம் இவை அனைத்தையும் கண்டித்து தமிழகம் முழுவதும் அக். 6ல் அந்தந்த கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அக்., 7 முதல் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம். சங்கங்களுக்கு உட்பட்ட 32 ஆயிரத்து 500 ரேஷன் கடைகளும் செயல்படாது என்றார்.