தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கோயில் இடத்தை காலி செய்ய மறுப்பதா: மதுரையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

கோயில் இடத்தை காலி செய்ய மறுப்பதா: மதுரையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

கோயில் இடத்தை காலி செய்ய மறுப்பதா: மதுரையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 13, 2026 06:48 PM

ADDED : நவ 13, 2026 06:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 06:48 PM ADDED : நவ 13, 2026 06:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: ‘‘மதுரை கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள பூங்கா முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்துவதுடன், கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மாநகராட்சி கையகப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தி பக்தர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா பேசியதாவது:

மாநகராட்சி கமிஷனரின் இல்லத்திற்கு அருகே உள்ள இடத்தில் ராஜாஜி பூங்கா, முருகன் கோயில் உள்ளது. இதில் 3,800 சதுர அடி மனையை, விவேகானந்தன் என்பவர், பொது ஏலத்தில் குத்தகைக்கு பெற்றார். அவ்விடத்தில் ஒரு உணவகம் செயல்படுகிறது.

கோயில் மேம்பாட்டுப் பணிக்கு உணவக இடம் தேவையாக உள்ளது. எனவே அந்த உணவகத்திற்கு மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் அருகே 20 சென்ட் காலி நிலத்தை 2026 மார்ச் 13ல் மாநகராட்சி கமிஷனர் வழங்கினார். அதே நாள் உணவகத்திற்கு கூடுதலாக 10 சென்ட் நிலமும் வழங்கப்பட்டது.

மாநகராட்சி கூட்டத்தில் இந்த மாற்று இடத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் உணவக நிர்வாகம் அந்த இடத்தில் கட்டுமானத்தை துவங்கியுள்ளது. அதேநேரம் கோயில் அருகே தனது ஓட்டலையும் காலி செய்யவில்லை.

இவ்விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாநகராட்சி வழக்கறிஞர்கள் தங்கள் தரப்புக்கு போதிய நேரம் ஒதுக்க கேட்டுக்கொண்டனர். மாநகராட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இதில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு யாரோ அழுத்தம் தருகின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது.

வழக்கு நவ.16ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்வைத்து ஆக்கிரமிப்பாளரை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் முருக பக்தர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us