/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அண்ணா பல்கலை கல்லுாரியில் மண்டல தொழில்நுட்ப மையம் திறப்பு
/
மதுரை அண்ணா பல்கலை கல்லுாரியில் மண்டல தொழில்நுட்ப மையம் திறப்பு
மதுரை அண்ணா பல்கலை கல்லுாரியில் மண்டல தொழில்நுட்ப மையம் திறப்பு
மதுரை அண்ணா பல்கலை கல்லுாரியில் மண்டல தொழில்நுட்ப மையம் திறப்பு
ADDED : செப் 27, 2025 04:26 AM

மதுரை: மதுரை அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில், தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவை துறை சார்பில், தமிழ்நாடு தொழில்நுட்ப மண்டல மையம் திறப்பு விழா நடந்தது.
மையத்தின் சி.இ.ஓ., வனிதா வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்து பேசுகையில், ''சமூகப் பிரச்னைகளுக்கு 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தீர்வுகளை வழங்குகின்றன. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவராக பெண்கள் உள்ளனர். ஐ.டி., தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்'' என்றார்.
அண்ணா பல்கலை கல்லுாரி டீன் லிங்கதுரை நன்றி கூறினார். இம்மையத்தின் செயற்கைக்கோள் அலுவலகம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அதன் சேர்மன் ஹரி தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தானது. இது போல திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை பகுதிகளின் 29க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் புதுமைகளை உருவாக்கவும், வணிகமயமாக்கல், சந்தை அணுகல், நிதி, தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு இம்மையத்தின் தேவை உள்ளது. மாநிலத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்தின்சீரான வளர்ச்சிப் பாதைக்கு இம்மையம்பங்களிக்கும். மதுரை மண்டலத்தில் 481 ஆராய்ச்சியாளர்கள், 293 காப்புரிமையாளர்கள் இம்மையத்தில் இணைந்துள்ளனர்.