ADDED : அக் 18, 2024 05:30 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் அனைத்து மண்டலங்களுக்கு இடையே நடந்த வாலிபால் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 8 வது முறையாக கோப்பை வென்றது.
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் நடந்த வாலிபால் போட்டியில் 'ஏ' மண்டலத்தில் அமெரிக்கன் கல்லுாரியும், 'பி' மண்டலத்தில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியும், 'சி' மண்டலத்தில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியும், 'டி' மண்டலத்தில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியும் பங்கேற்றன.
லீக் முறையில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அமெரிக்கன் கல்லுாரி கோப்பை வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களை அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பாராட்டினர்.