நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: - சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உதவிச் செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அருள் விளக்கேற்றி, அகவல் பாராயணம் படிக்கப்பட்டது.
'மனுமுறை கண்ட வாசகம்' என்ற பொருளில் வேங்கடராமன் பேசினார். சந்திரசேகர் பக்தி பாடல்கள் பாடினார். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகி சாந்தி நன்றி கூறினார். மகாமுனி, பாண்டி வேல் அன்னதானம் வழங்கினர்.