ADDED : செப் 12, 2026 11:53 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி, செப். 13 –-
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி நிறுவனர்களில் ஒருவரான வி.கே.சி., நடராஜன் ஐ.ஏ.எஸ்., நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அவரது குடும்பத்தினர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உடற்கல்வியியல் கல்லூரி நிறுவனர் பாண்டியன், கல்லூரி முன்னாள் பொருளாளர் வனராஜா, முதல்வர் பால்ராஜ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
